மணவாழ்க்கைக்கான 10 பொருத்தங்கள் https://youtu.be/_jO-AXWqAts?si=skAQ_Mqv1gJuXB5u ஜோதிடர் வரன்கள் இருவரது ஜாதகத்தை கணித்து உத்தமம் என்று சொன்னால் தான் மேற்கொண்டு பேசுவார்கள். இல்லையென்றால், அடுத்த ஜாதகத்திற்கு தாவி விடுவார்கள். அதென்ன பத்து பொருத்தம்? ஜோதிடர் ஏதோ சொல்கிறார், நாங்களும் கேட்கிறோம் என்று தான் இந்த கேள்விக்கு நம்மில் பலர் பதில் சொல்வார்கள். நீங்களும் அந்த பத்து பொருத்தம் என்னவென்று அறிய வேண்டாமா? 1. தினப் பொருத்தம் : இதை நட்சத்திர பொருத்தம் என்றும் சொல்வார்கள். ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ள இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது. 2. கணப் பொருத்தம் : இது தான் குணத்தை பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய பொருத்தம். மனைவியாக வரப்போகிறவள், கணவனாக வரப்போகிறவன் எத்தகைய குணத்தை பெற்றிருப்பான் என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம். 3. மகேந்திரப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இந்த பொருத்தம் இருந்தால் தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்...
பக்தி-தமிழ் Bhakti in tamil Discover the essence of Bhakti in Tamil with inspiring videos, pictures, and spiritual insights. Dive into a world of devotion and enlightenment today! Manikandan_Bhakti(பக்தி) Manikandan_மணிகண்டன்(பக்தி)