அருள்மிகு சுந்தராம்பிகை அம்மை உடனுறை வைத்தியநாத சுவாமி திருத்தலம் இ றைவனார் திருப்பெயர்: வயிரத்தூண் நாதர், வைத்தியநாதர், மழுவாடீஸ்வரர். (சுயம்பு மூர்த்தி) இறைவியார் திருப்பெயர்: சுந்தராம்பிகை, அழகம்மை. தல மரம்: பனை மரம் ஆறு: கொள்ளிடப் பேராறு அரியலூர் மாவட்டம் திருமழப்பாடியில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள, சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி திருக்கோவில் மிகவும் பழைமையான சிவாலயம் ஆகும். இக்கோவில் நந்தி தேவர் திருமணத்திற்காகப் புகழ்பெற்றது மற்றும் நோய்களைத் தீர்க்கும் திருத்தலமாக விளங்குகிறது. தை மாதத்தில் சூரிய ஒளி மூலவர் மீது விழுவது சிறப்பம்சம். வழிபட்டோர்: நந்தி தேவர், சம்பந்தர், அப்பர், சுந்தரர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேக்கிழார், திருமால், மார்க்கண்டேயர், இந்திரன், புருஷாமிருக ரிஷி முதலானோர். இறைவன், மார்க்கண்டேயருக்காக மழுவேந்தி நடனமாடிய பதியாதலின் இப்பெயர் பெற்றது. நந்திதேவருக்கு சுயசாம்பிகையை திருமணம் செய்விக்கப் பெற்றத் தலம். திருநந்தியெம் பெருமான், திருக்கல்யாண விழா, ஆண்டுதோறும், பங்குனி புனர்பூச நாளன்று மிகச் சிறப்பாய் நடைபெறுகிறது. புரு...
பக்தி-தமிழ் Bhakti in tamil Discover the essence of Bhakti in Tamil with inspiring videos, pictures, and spiritual insights. Dive into a world of devotion and enlightenment today! Manikandan_Bhakti(பக்தி) Manikandan_மணிகண்டன்(பக்தி)