முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured Post

Manikandan_மணிகண்டன்(பக்தி) மயிலை ஶ்ரீ கபாலீஸ்வரர் ஆலயம் அறுபத்து மூவர்கள் புறப்பாடு இனிதே துவங்கியது

சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி திருக்கோவில்

 அருள்மிகு சுந்தராம்பிகை அம்மை உடனுறை வைத்தியநாத சுவாமி திருத்தலம்

றைவனார் திருப்பெயர்: வயிரத்தூண் நாதர், வைத்தியநாதர்,


மழுவாடீஸ்வரர். (சுயம்பு மூர்த்தி)

இறைவியார் திருப்பெயர்: சுந்தராம்பிகை, அழகம்மை.

தல மரம்:  பனை மரம்

ஆறு: கொள்ளிடப் பேராறு

 

  அரியலூர் மாவட்டம் திருமழப்பாடியில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள, சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி திருக்கோவில் மிகவும் பழைமையான சிவாலயம் ஆகும். இக்கோவில் நந்தி தேவர் திருமணத்திற்காகப் புகழ்பெற்றது மற்றும் நோய்களைத் தீர்க்கும் திருத்தலமாக விளங்குகிறது. தை மாதத்தில் சூரிய ஒளி மூலவர் மீது விழுவது சிறப்பம்சம். 

 

வழிபட்டோர்: நந்தி தேவர், சம்பந்தர், அப்பர், சுந்தரர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேக்கிழார், திருமால், மார்க்கண்டேயர், இந்திரன், புருஷாமிருக ரிஷி முதலானோர்.

         தலப்பெருமை

இறைவன், மார்க்கண்டேயருக்காக மழுவேந்தி நடனமாடிய பதியாதலின் இப்பெயர் பெற்றது.
நந்திதேவருக்கு சுயசாம்பிகையை திருமணம் செய்விக்கப் பெற்றத் தலம். திருநந்தியெம் பெருமான், திருக்கல்யாண விழா, ஆண்டுதோறும், பங்குனி புனர்பூச நாளன்று மிகச் சிறப்பாய் நடைபெறுகிறது.
புருஷாமிருக ரிஷி என்பவர் பிரமலோகத்திலிருந்தச் சிவலிங்கத்தை இங்கு எழுந்தருளுவித்தார். அதை மீண்டும் பிரமன் பெயர்க்கமுனைந்தபோது முடியாமல் பிரமன், இது,"வயிரத் தூணோ" என்று வியந்தமையால், இறைவர் வயிரத் தூண் நாதர் எனப் பெற்றார்.
ஈசன், சுந்தரர் பால், "மழபாடிக்கு வர மறந்தனையோ" என அழைத்த திருத்தலம்.

சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி திருக்கோவில்







x

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விநாயகர் சதுர்த்தி மாவடி விநாயகர் கோவில் மணலூர்பேட்டை & Manalurpet Mavadi Vinayagar Kovil

"விநாயகர் சதுர்த்தி" என்பது விநாயகரின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு முக்கியமான இந்துப் பண்டிகை. இது ஆவணி மாதத்தில் (ஆகஸ்ட்-செப்டம்பர்) வளர் பிறையின் நான்காம் நாளில் கொண்டாடப்படுகிறது. Vinayagar image Kovil image https://en.m.wikipedia.org/wiki/Ganesh_Chaturthi இந்த நாளில், மக்கள் தங்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் களிமண் அல்லது பிற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். இந்த சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் மற்றும் அலங்காரங்கள் செய்வார்கள். விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், சுண்டல், அவல், பொரி போன்ற இனிப்பு மற்றும் கார பலகாரங்கள் படைத்து வழிபடுவார்கள். அத்துடன், அருகம்புல், எருக்கம்பூ போன்றவையும் விநாயகருக்கு விசேஷமாகப் படைக்கப்படுகின்றன. பத்து நாட்கள் வரை நீடிக்கும் இந்தப் பண்டிகையின் முடிவில், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் (குளம், ஆறு, கடல்) கரைப்பார்கள். இது, விநாயகர் மீண்டும் கைலாச மலைக்குத் திரும்புவதைக் குறிப்பதாகவும், சிலையுடன் சேர்த்து நமது துன்பங்களும், தீய எண்ணங்களும் கரை...

அர்த்தநாரீஸ்வரர்_கோவில்_ரிஷிவந்தியம் & Rishivandiyam Ardhanareeshwarar Temple

அர்த்தநாரீஸ்வரர் கோவில்- ரிஷிவந்தியம் https://manimpt79.blogspot.com/ >

Navarathri_poojai_8th_day & நவராத்திரி எட்டாம் நாள் பூஜைக்கான தேவி: துர்கா தேவி

  நவராத்திரி எட்டாம் நாள் பூஜைக்கான தேவி: துர்கா தேவி. நவராத்திரியின் எட்டாம் நாள், மகா துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நாள் துர்காஷ்டமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாளில், துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களில் மிகவும் உக்கிரமான ரூபமான துர்கா தேவியை மக்கள் வழிபடுகின்றனர். துர்கா தேவி தீமைகளை அழிக்கும் சக்தியாகவும், நல்லவர்களுக்கு தைரியம் மற்றும் பாதுகாப்பைக் கொடுப்பவராகவும் கருதப்படுகிறார். https://youtube.com/shorts/RroBGWuCdZw இந்த நாளில், பல இடங்களில் சிறப்பு பூஜைகளும், யாகங்களும் நடத்தப்படுகின்றன. மேலும், குழந்தைகளுக்கு புதிய ஆடைகள் மற்றும் பரிசுகள் கொடுத்து மகிழ்வது வழக்கம். இந்த நாள் நவராத்திரி கொண்டாட்டங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகக் கருதப்படுகிறது.