பத்ரகாளியம்மன் தமிழ்நாட்டில் முக்கனிகளில் சுவையான மாம்பழத்திற்கு பெயர் பெற்ற தித்திக்கும் மாவட்டம் சேலம் மாவட்டம் ஆகும். சேலத்தில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், புண்ணிய காவிரி நீரை தேக்கி வைக்கும் மேட்டூர் அணையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் மேச்சேரி உள்ளது.இங்கு சேலம்–தர்மபுரி மெயின்ரோடு பிரிவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பிரதான வாசல் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. மேலும் கோவிலைச் சுற்றி உயர்ந்த மதில்களும், நான்கு திசைகளிலும் நான்கு கோபுரங்களுடன் கூடிய வாசல்களும் உள்ளன. கருவறை முன் மண்டபத்தின் மையம் பகுதியிலிருந்து பார்த்தால் மூலவரையும் மூலவர் கோபுர தங்க கலசத்தையும் ராஜகோபுர கலசங்ளையும் தரிசிக்கலாம். தொலைவிலிருப்பவர்களும் மூலவரை தடையின்றி பார்க்கும் வகையில் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.திருவிழாக் காலங்களிலும் அமாவாசை பௌர்ணமி நாட்களிலும் வரும் பக்தர்கள் இளைப்பாறி செல்ல கிராணைட் பதித்த சுற்று மண்டபம், பிரமாண்டமான கொடி கம்பம், வசந்த மண்டபங்கள் ஆகம விதிப்படி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு அலங்காரத்தில் நீல நிற பட்டு /ரோஸ் காப்பு அலங்காரத்தில் /செங்கோல் ஏந்தி உலகை ஆளும் /மகாராணி அலங்காரத்தில் அருள் பாலிக்கிறாள் என் அன்னை மேச்சேரி_ஶ்ரீபத்ரகாளி_அம்மன்
"விநாயகர் சதுர்த்தி" என்பது விநாயகரின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு முக்கியமான இந்துப் பண்டிகை. இது ஆவணி மாதத்தில் (ஆகஸ்ட்-செப்டம்பர்) வளர் பிறையின் நான்காம் நாளில் கொண்டாடப்படுகிறது. Vinayagar image Kovil image https://en.m.wikipedia.org/wiki/Ganesh_Chaturthi இந்த நாளில், மக்கள் தங்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் களிமண் அல்லது பிற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். இந்த சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் மற்றும் அலங்காரங்கள் செய்வார்கள். விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், சுண்டல், அவல், பொரி போன்ற இனிப்பு மற்றும் கார பலகாரங்கள் படைத்து வழிபடுவார்கள். அத்துடன், அருகம்புல், எருக்கம்பூ போன்றவையும் விநாயகருக்கு விசேஷமாகப் படைக்கப்படுகின்றன. பத்து நாட்கள் வரை நீடிக்கும் இந்தப் பண்டிகையின் முடிவில், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் (குளம், ஆறு, கடல்) கரைப்பார்கள். இது, விநாயகர் மீண்டும் கைலாச மலைக்குத் திரும்புவதைக் குறிப்பதாகவும், சிலையுடன் சேர்த்து நமது துன்பங்களும், தீய எண்ணங்களும் கரை...

கருத்துகள்
கருத்துரையிடுக