முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured Post

Manikandan_மணிகண்டன்(பக்தி) மயிலை ஶ்ரீ கபாலீஸ்வரர் ஆலயம் அறுபத்து மூவர்கள் புறப்பாடு இனிதே துவங்கியது

திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில் எமனை விரட்டிய நந்தி தமிழ்நாட்டில்




எமனை விரட்டிய நந்தி உள்ள கோயில் எது தெரியுமா

 


கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருவைகாவூர். எமனை விரட்டிய நந்தியுள்ள கோயில் அமைந்த திருத்தலம் இதுவாகும். இது தேவார பாடல் பெற்ற சிவத்தலமாகும். மிகப் பழைமையான கோயில். இறைவனின் பெயர் வில்வநாத சுவாமி. இறைவியின் பெயர் மங்களாம்பிகை. வில்வ வனங்களுக்கு நடுவே கோயில் கொண்டிருந்ததால் இறைவனுக்கு இப்பெயர் வந்தது.

தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது. சோழர் கால பாணியில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் முகப்பில் வவ்வாலத்தி மண்டபம் உள்ளது. அதனுள் நுழைந்தால் மிகவும் விசாலமான பிராகார சுற்று உயர்ந்து, நீண்ட மதில் சுவர். அதனையடுத்து மிகச்சிறிய, ஆனால் கலை அழகுடன் கூடிய கோபுரம் காணப்படுகிறது. கருவறையின் முன்னால் இருக்கும் நந்தி வித்தியாசமாக இருக்கிறது. மற்ற சிவாலயங்களில் பெரும்பாலும் நந்தி கோயிலின் கருவறையை நோக்கிய படியே அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால், இங்கு நுழைவாயிலை நோக்கிக் கொண்டு காட்சி தருகிறது.


எமன் ஒரு சமயம் சிவபெருமானை எதிர்க்க, அதனால் கோபம் கொண்ட நந்தி தேவர் எமனை விரட்டிக் கொண்டு ஓடி வந்தது. நந்தி சீறிய வேகத்தில் எமன் பாய்ந்து கோயிலின் எதிரில் உள்ள குளத்தில் விழுந்து மூழ்கியதாக சொல்லப்படுகிறது. மீண்டும் எமன் கோயிலுக்குள் நுழையாமல் பாதுகாப்பாக நந்தி இன்னமும் கோயில் குளத்தைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

எமன் விழுந்த குளம் ‘எமகுளம்’ என்ற பெயரில் இன்றளவும் வழங்கி வருகிறது. மற்ற கோயில்களை போலவே இங்கும் விநாயகர், முருகன், துர்கை சன்னிதிகள் உள்ளன. கோயில் திருச்சுவர்களில் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. கோயிலின் உள்ளே ஆங்காங்கு வேடன் மோட்சமுற்ற கதையை சுதையாகவும் சிற்பமாகவும் செய்து வைத்திருக்கிறார்கள். கிழக்கு நோக்கி சித்தி விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது.


ஆலயத்தில் சம்ஹார முத்துக் குமாரசாமியின் திருவடி வலது காலை மயில் மேல் ஊன்றி வில்லேந்திய திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இந்த சம்ஹார மூர்த்தியை தொடர்ந்து ஆறு செவ்வாய்க் கிழமைகளிலோ அல்லது ஆறு சஷ்டி நாட்களிலோ சிவப்பு அரளி மாலை சூட்டி பீட்ரூட் சாதம் நிவேதனம் செய்து 6 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் எதிரிகள், பகைவர்கள் தொல்லை விலகும்.

கோயில் வெளிப் பிராகாரத்தில் விநாயகர் சன்னிதிக்கு அருகில் சனீஸ்வரர் தனி சன்னிதியில் எழுந்தருளி உள்ளார். எனவே, இத்தல விநாயகரையும் சனீஸ்வரரையும் கந்தசாமியையும் பைரவரையும் சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி தொடர்ந்து எட்டு சனிக் கிழமைகள் வழிபட்டு வந்தால் சகல சனி தோஷங்களும், மாந்தி தோஷமும் அகன்று விடும் என்று கூறப்படுகிறது

 எமனை விரட்டிய நந்தி உள்ள கோயில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில் ஆகும். இங்குள்ள நந்தி, சிவபெருமானைக் காக்க எமனை விரட்டியதால், கருவறையை நோக்காமல் நுழைவாயிலை நோக்கி படுத்த கோலத்தில் சீறும் வேகத்தில் காட்சியளிக்கிறது. இது தேவார பாடல் பெற்ற தலம், இங்கு எம பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. 

சிறப்பம்சங்கள்:

தல பெயர்: திருவைகாவூர் (வில்வவனம்).

மூலவர்: வில்வநாத சுவாமி (வில்வவனேசுவரர்).

அதிசய நந்தி: மற்ற கோயில்களில் நந்தி கருவறையை பார்த்திருக்கும், ஆனால் இங்கு எமனை விரட்டியதால் நுழைவாயிலை பார்த்தபடி உள்ளது.

தல புராணம்: மார்க்கண்டேயருக்காக சிவபெருமான் எமனை விரட்டிய இடம், நந்தி எமனை விரட்டி கோயிலின் குளத்தில் விழாச் செய்தது. 

https://youtube.com/shorts/e49QxtAPjwk?si=aL-QxK5AKC3bBBr- 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விநாயகர் சதுர்த்தி மாவடி விநாயகர் கோவில் மணலூர்பேட்டை & Manalurpet Mavadi Vinayagar Kovil

"விநாயகர் சதுர்த்தி" என்பது விநாயகரின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு முக்கியமான இந்துப் பண்டிகை. இது ஆவணி மாதத்தில் (ஆகஸ்ட்-செப்டம்பர்) வளர் பிறையின் நான்காம் நாளில் கொண்டாடப்படுகிறது. Vinayagar image Kovil image https://en.m.wikipedia.org/wiki/Ganesh_Chaturthi இந்த நாளில், மக்கள் தங்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் களிமண் அல்லது பிற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். இந்த சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் மற்றும் அலங்காரங்கள் செய்வார்கள். விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், சுண்டல், அவல், பொரி போன்ற இனிப்பு மற்றும் கார பலகாரங்கள் படைத்து வழிபடுவார்கள். அத்துடன், அருகம்புல், எருக்கம்பூ போன்றவையும் விநாயகருக்கு விசேஷமாகப் படைக்கப்படுகின்றன. பத்து நாட்கள் வரை நீடிக்கும் இந்தப் பண்டிகையின் முடிவில், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் (குளம், ஆறு, கடல்) கரைப்பார்கள். இது, விநாயகர் மீண்டும் கைலாச மலைக்குத் திரும்புவதைக் குறிப்பதாகவும், சிலையுடன் சேர்த்து நமது துன்பங்களும், தீய எண்ணங்களும் கரை...

அர்த்தநாரீஸ்வரர்_கோவில்_ரிஷிவந்தியம் & Rishivandiyam Ardhanareeshwarar Temple

அர்த்தநாரீஸ்வரர் கோவில்- ரிஷிவந்தியம் https://manimpt79.blogspot.com/ >

Navarathri_poojai_8th_day & நவராத்திரி எட்டாம் நாள் பூஜைக்கான தேவி: துர்கா தேவி

  நவராத்திரி எட்டாம் நாள் பூஜைக்கான தேவி: துர்கா தேவி. நவராத்திரியின் எட்டாம் நாள், மகா துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நாள் துர்காஷ்டமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாளில், துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களில் மிகவும் உக்கிரமான ரூபமான துர்கா தேவியை மக்கள் வழிபடுகின்றனர். துர்கா தேவி தீமைகளை அழிக்கும் சக்தியாகவும், நல்லவர்களுக்கு தைரியம் மற்றும் பாதுகாப்பைக் கொடுப்பவராகவும் கருதப்படுகிறார். https://youtube.com/shorts/RroBGWuCdZw இந்த நாளில், பல இடங்களில் சிறப்பு பூஜைகளும், யாகங்களும் நடத்தப்படுகின்றன. மேலும், குழந்தைகளுக்கு புதிய ஆடைகள் மற்றும் பரிசுகள் கொடுத்து மகிழ்வது வழக்கம். இந்த நாள் நவராத்திரி கொண்டாட்டங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகக் கருதப்படுகிறது.